உலகம்

பிரதமர் மோடிக்காக ஆஸ்திரேலியா பிரதமர் செய்த மாங்காய் சட்னி சமோசா

பிரதமர் மோடிக்காக ஆஸ்திரேலியா பிரதமர் செய்த மாங்காய் சட்னி சமோசா

PT

ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்தியப் பிரதமருக்காக சமோசா சமைத்து வழங்கியுள்ளார். அதற்கு இந்தியப் பிரதமர் மோடி ஒரு சுவாரஸ்யமான பதிலைப் பதிவிட்டுள்ளார்.


ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “இன்று சமோசா உடன் சேர்த்து மாங்காய் சட்னியும் தயாரித்துள்ளேன். இந்த வாரம் காணொளி காட்சி வழியாக நரேந்திர மோடியைச் சந்திக்க இருக்கிறேன். அவர் சைவ உணவு உண்பவர். நான் அவருடன் இதனைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்று கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி “ இந்தியப் பெருங்கடல் பகுதியை இந்தச் சமோசா இணைத்துள்ளது. பார்ப்பதற்கே ருசியாகத் தெரிகிறதே ஸ்காட் மோரிசன். நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதும் நாம் இணைந்து சமோசாவை மகிழ்ச்சியாக ருசிக்கலாம். வரும் நான்காம் தேதி உங்களுடன் நடக்கும் வீடியோ சந்திப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு ட்விட்டர் வாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.