உலகம்

டெலி பிராம்ப்டரில் இருந்ததை தவறாக புரிந்து கொண்டு பேசிய ஜோ பைடன்: விமர்சித்த எலான் மஸ்க்

ச. முத்துகிருஷ்ணன்

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் டெலி பிராம்ப்டரில் இருந்ததை தவறாக புரிந்து கொண்டு உரையாற்றிய காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசு பொருளாகி உள்ளது. அந்நாட்டு மக்களிடம் துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் இணைந்து பெண்களின் இனப்பெருக்க உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும், உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு குறித்தும் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஒரு வாக்கியத்தை முடிக்கும்போது தவறுதலாக “மேற்கோள் முடிந்து, வரியைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்” என்று கூறினார்.

அவர் டெலி பிராம்ப்டரில் "மீண்டும் அந்த வசனத்தை கூறுங்கள்" என்று எழுதி இருந்ததை தவறாக புரிந்து கொண்டார். முன்னர் கூறியதை திரும்ப கூறாமல், “மீண்டும் அந்த வசனத்தை கூறுங்கள்” என்றே பைடன் பேசினார். இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், டெலி பிராம்ப்டரை முறையாக கையாள தெரிந்தவர்களே சிறந்த தலைவர் என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.