உலகம்

ஹெச்-2பி விசாக்களின் எண்ணிக்கையை அதிகரித்தது அமெரிக்கா

ஹெச்-2பி விசாக்களின் எண்ணிக்கையை அதிகரித்தது அமெரிக்கா

webteam

ஹெச்-2பி விசாக்‍களின் எண்ணிக்‍கையை 15 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
 
அமெரிக்‍காவில், இந்த நிதியாண்டின் எஞ்சிய காலத்திற்கான, குறைந்த ஊதியங்கள் மற்றும் குறுகிய காலப் பணிகளுக்‍கான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்‍கு வழங்கப்படும் H-2B விசாக்‍களின் எண்ணிக்‍கையை மேலும் 15 ஆயிரமாக அதிகரித்து அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்‍காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் வழக்‍கமாக H-2B விசாக்‍களின் எண்ணிக்‍கையைவிட 45 சதவீதம் அதிகம் என்று அமெரிக்‍க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்‍கான அதிகாரிகள், நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கடல் உணவு, சுற்றுலா மற்றும் பிற தொழில்துறைகளில் இந்த விசாவின் கீழ் பணியாற்ற முடியும். ஆனால் பண்ணைத் தொழிலாளர்களாக பணியாற்ற முடியாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.