women missing
women missing  ITV
பெண்கள்

இந்தியாவில் 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயம் - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

Justindurai S

இந்தியாவில் 2019 முதல் 2021 வரையிலான 3 ஆண்டுகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10,61,648 பெண்கள், 2,51,430 சிறுமிகள் என 13.13 லட்சம் பேர் காணாமல் போயுள்ளதாக நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இவற்றில் மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டில் 82,084 சிறுமிகள் மற்றும் 3,42,168 பெண்களும், 2020இல் 79,233 சிறுமிகள் மற்றும் 3,44,422 பெண்களும் காணாமல் போயுள்ளதாக அஜய் குமார் மிஸ்ரா கூறியிருக்கிறார்.

women missing

தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள தரவுகளின்படி,

2019ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 82,619 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 49,436 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். 3,29,504 பெண்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 1,68,793 பேர் மீட்கப்பட்டனர்.

2020இல் 79,233 சிறுமிகளும் 3,44,422 பெண்களும் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 2,24,043 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர் (மீட்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை.)

2021ஆம் ஆண்டில், 90,113 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 58,980 சிறுமிகள் மீட்கப்பட்டனர். 3,75,058 பெண்கள் காணாமல் போயுள்ளனர், 2,02,298 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

2019 முதல் 2021 வரை வரையிலான காலக்கட்டத்தில்

* மத்திய பிரதேசத்தில் 1,60,180 பெண்களும், 38,234 சிறுமிகளும் மாயமாகி உள்ளனர்.

* மேற்குவங்க மாநிலத்தில் 1,56,905 பெண்களும், 36,666 சிறுமிகளும் மாயமாகி உள்ளனர்.

* மகாராஷ்டிராவில் 1,78,400 பெண்களும், 13,033 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.

* ஒடிசாவில் 70,222 பெண்களும், 16,649 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.

* சத்தீஸ்கரில் இருந்து 49,116 பெண்களும் 10,817 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.

women missing
யூனியன் பிரதேசங்களில் தலைநகர் டெல்லியில் தான் அதிக அளவில் பெண்களும் சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* டெல்லியில் 61,054 பெண்களும், 22,919 சிறுமிகளும், ஜம்மு காஷ்மீரில், 8,617 பெண்களும் 1,148 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.

இப்படியாக இந்தியாவில் 2019 - 21 வரையிலான 3 ஆண்டுகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10,61,648 பெண்கள், 2,51,430 சிறுமிகள் என 13.13 லட்சம் பேர் காணாமல் போயுள்ளதாக நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் “நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, 2013ல் சட்டம் இயற்றப்பட்டு, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால், துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், அச்சட்டத்தில் 2018ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாலியல் வன்கொடுமை சம்பவ வழக்குகளை, இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் சட்டம் வழிவகுக்கிறது” என்று உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.