சென்னை வேளச்சேரியில் சைக்கிளில் சென்ற பெண் மீது மினி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வேளச்சேரி 100அடி சாலையில் சைக்கிளில் சென்ற சங்கீதா என்ற பெண் சிக்னலை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்திசையில் வந்த, தனியார் ஊழியர்களை ஏற்றிச்சென்ற மினி பேருந்து அந்த பெண் மீது மோதியது. பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் சங்கீதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் ஓட்டுநர் புஷ்பராஜை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.