ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் இன்று டெல்லி - கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.
ஷார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு இந்தப்போட்டி நடைபெறவுள்ளது. மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியில் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் தொடந்து தடுமாறி வருவது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. டெல்லி அணியில் பந்துவீச்சு சிறப்பாக இருந்தாலும் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இரு அணிகளும் சமபலத்தில் இருக்கும் நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்குவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 15 போட்டிகளிலும் டெல்லி அணி 12 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.