model image
model image PT Web
வீடியோ ஸ்டோரி

தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டும் சீன மக்கள்.. இதுதான் காரணமா?

PT WEB

சீனாவில் புத்தாண்டு நெருங்கி வருவதால், அங்கு தங்க நகைகள் விற்பனை அதிகரித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு தங்கம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள சீன மக்கள், தங்கம் விலை அதிகரித்தாலும் முதலீட்டு நோக்கில் தங்க நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் சில்லறை விற்பனையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சீன நாட்காட்டியின்படி, வரும் 10ஆம் தேதி டிராகன் ஆண்டு பிறக்கவுள்ளதால் தங்கத்தை வாங்கி மகிழ்கின்றனர். குறிப்பாக, புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்காக சீனர்கள் டிராகன் படம் பொறிக்கப்பட்ட நகைகளை வாங்கிச் செல்கின்றனர். இதனிடையே சீனாவில் தங்கத்தில் முதலீடு செய்வது கடந்தாண்டு 16.8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் சீனாவில் தங்க நுகர்வு 1,000 டன்களை தாண்டியுள்ளதாகவும் அந்த கவுன்சில் கூறியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு சீனாவில் தங்கம் வாங்குவது 9 சதவிகிதம் அதிகரித்து காணப்படுவதாகவும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த முழுத் தகவல்களைத் தெரிந்துகொள்ள இந்த வீடியோவில் பார்க்கவும்.