former forest officer
former forest officer pt desk
வீடியோ ஸ்டோரி

காட்டு யானைகள் ஊருக்குள் அடிக்கடி நுழைவது ஏன்? அதன் குணநலன் என்ன?-முன்னாள் வனத்துறை அதிகாரி விளக்கம்

webteam

யானைகள் ஊருக்குள் வருவது மூன்று காரணங்களுக்காக என்கிறார்கள், யானைகள் குறித்து நன்கறிந்தவர்கள்.

1. வனத்தில் உணவு, தண்ணீர் கிடைக்காமல், அவற்றைதேடி யானைகள் ஊருக்குள் வருகின்றன.

2. இரண்டாவது, ஆண்டாண்டு காலமாகபல தலைமுறைகளாக வந்த வலசைப்பாதைகள் குடியிருப்புகளாக மாறியதால் குழப்பமடைந்து ஊருக்குள் நுழைவது. எளிதாக கிடைக்கும் உணவுக்காக வந்த இடத்தில் இருந்து மாறாமல் அங்கேயே சுற்றிவருவது.

wild elephant

3. மூன்றாவது. பழகிய இடத்தில் இருந்து எங்கு விட்டாலும் சில யானைகள் மீண்டும் தங்கள் இடத்திற்கே வரும் என்று கூறும் முன்னாள் வனத் துறை அதிகாரி நசீர், அதற்கு ஒரு உதாரணத்தையும் கூறினார்.

வழக்கமாக கோடை காலத்தில் குடிநீர் மற்றும் உணவுக்காக வரும் யானைகள் ஒருவிதம் எனில், பயிர்களை சுவைத்துப் பழகியவை வேறுவிதம். நீர் கிடைக்குமிடம் பழகி விட்டால் யானைகள் அங்கிருந்து வெளியேறாது என்றார் வனத்துறை அதிகாரி நசீர்.

யானைகளை பட்டாசு வெடித்தோ, துன்புறுத்தியோ வனத்துக்குள் அனுப்பக் கூடாது என்பது நீதிமன்ற உத்தரவு என்பதால் ஒவ்வொரு முறையும் யானைகள் ஊருக்குள் வரும்போதும் வனத் துறைக்கு சவால்தான் என்றார் இந்த முன்னாள் வனத்துறை அதிகாரி.