வீடியோ ஸ்டோரி

கன்னியாகுமரி: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளிலிருந்து நீர் திறப்பு

Sinekadhara

கன்னியாகுமரியில் விட்டு விட்டு பெய்துவரும் மழையால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கன்னியாகுமரியில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளிலிருந்து 25ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திக்குறிச்சி, குழித்துறை, காஞ்சாம்புரம், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு, உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

குழித்துறை மேல்புறம் சாலை, மாங்காடு புதுக்கடை சாலை, அருமனை களியல் சாலை உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக, 25ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் மழைநீர் புகுந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகளில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.