வீடியோ ஸ்டோரி

ஸ்பெயினில் இடைவிடாது நெருப்புக் குழம்பை வெளியிடும் எரிமலை!

EllusamyKarthik

ஸ்பெயினின் லா பால்மா தீவில் கும்ரே வியாஜா எரிமலை தொடர்ந்து நெருப்புக் குழம்பை வெளியிட்டு வரும் நிலையில் அதன் மாதிரிகளை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் கும்ரே வியாஜா எரிமலை வெடித்து சிதறியது. அன்று முதல் தற்போது வரை இடைவெளி விடாமல் நெருப்பை வெளியிட்டு வருகிறது. இதனால் அப்பகுதியே செந்நிறத்தில் தகிக்கிறது. இந்த நிலையில் நெருப்புக் குழம்பு மாதிரிகளை விஞ்ஞானிகள் சேகரித்தனர். இவை 2 ஆயிரத்து 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் இருப்பதால், அதனை தண்ணீர் கொண்டு குளிரச் செய்ய முடிவு செய்துள்ளனர். நெருப்புக் குழம்பால் சுற்றுப்புறத்திற்கு ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.