வீடியோ ஸ்டோரி

தூத்துக்குடி: பள்ளியின் வசதிகளை மேம்படுத்த கல்விச்சீர் கொடுத்து மகிழ்ந்த கிராம மக்கள்

தூத்துக்குடி: பள்ளியின் வசதிகளை மேம்படுத்த கல்விச்சீர் கொடுத்து மகிழ்ந்த கிராம மக்கள்

நிவேதா ஜெகராஜா

தூத்துக்குடி அருகே பள்ளிகள் திறப்பைக் கொண்டாட்டமாக மாற்றியுள்ள ஒரு கிராம மக்கள், உடன் பள்ளிக்கூடத்துக்குத் தேவையான பொருள்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து கல்விச்சீராகக் கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா அச்சம் தணிந்து ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு, ஒன்று முதல் எட்டு வரையிலான வகுப்புகளுக்கு இன்று நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. இதையொட்டி தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிக்கு மாணவர்களின் பெற்றோர் சார்பில், ‘கல்விச்சீர்’ வழங்கும் விழா நடைபெற்றது.

அந்த ‘கல்விச்சீர்’ விழாவில், ரூ.50,000 மதிப்பில் பள்ளிக்குத் தேவையான பொருள்களை பெற்றோர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு நேரடியாக கொண்டு சென்றனர். அவர்களுடன் சீருடையுடன் வந்த மாணாக்கர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னாடை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றார். ஒன்றரை ஆண்டாக ஆன்லைனில் பயின்ற மாணாக்கர்கள், ஆசிரியர்களையும் சக மாணாக்கர்களையும் நேரில் பார்த்து மகிழ்ந்தனர்.