விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் இரண்டாவது நாளாக மழை தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் பணியில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.