ம.தி.மு.க.வை கலைத்து விட்டு தான் அரசியலை விட்டு விலக உள்ளதாக, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் LOGOவை பயன்படுத்தி சிலர் தவறான கருத்துக்களைப் பகிர்ந்து வருவதால், அவர்கள் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். மேல்மருவத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.