பண்டிகை நேரத்தில் பட்டாம்பூச்சிகள் போல படபடக்கும் சின்னக்குழந்தைகளுக்கு சந்தையில் நவநாகரீக ஆடை ரகங்கள் அறிமுகமாகியுள்ளன. இந்த தீபாவளிக்கான புதுவரவுகள் என்ன?
மழலை மொழி பேசி தத்தி தத்தி நடந்து தனக்கானவற்றை தேர்ந்தெடுக்க பறக்கின்றனர் குழந்தைகள். இந்த தீபாவளிக்கு குழந்தைகளை மகிழ்விக்கவும் மனதிற்கேற்ப ஆடைகளை தேர்வு செய்யவும் கடைகளில் குவிந்துள்ளனர் குழந்தைகளும் பெற்றோரும். இவர்களுக்கான புதுரக ஆடைகளும் கடைகளில் குவிந்துள்ளன.
வெல்வெட் லெஹங்கா, பாந்தினி ப்ரிண்ட், ஃப்லோரல் ப்ரிண்ட், 4 வே பேண்ட் என இன்னும் பல அசத்தல் ஆடைகள் சிறுவர்களை அலங்கரிக்கின்றன. வண்ண வண்ண ஆடைகளை அணிந்து பார்ப்பதோடு கடைகளுக்கு வரும் அனுபவத்தையும் பகிர்கின்றனர் சிறுவர், சிறுமிகள். முழு விவரத்தையும் வீடியோவில் காணலாம்.