விலை உயர்வை சமாளிக்க வாடிக்கையாளர்களுக்கு தக்காளி சாதம் விற்பதை நிறுத்திவிட்டதாக சென்னை சிஐடி நகரில் உள்ள சிற்றுண்டிக்கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிற்றுண்டிக்கடை உரிமையாளர் பேசுகையில், ‘’தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை உயர்வை சமாளிக்க முடியவில்லை. 15 கிலோ தக்காளி வாங்கிவந்த நிலையில் தற்போது 2 கிலோ மட்டுமே வாங்குகிறோம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு தக்காளி சாதம், தக்காளி சட்னி வழங்குவதை நிறுத்துவிட்டோம். அதற்கு பதிலாக கேரட், தேங்காய், புளி, தயிர் சாதங்களை வழங்குகிறோம். காய்கறிகளை குறைத்துவிட்டதால் சாம்பாரின் சுவையும் குறைந்துவிட்டது’’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.