பெரு நாட்டில் சுமார் 3 ஆயிரம் ஆமைக் குட்டிகள் அமேசான் மழைக்காடுகளில் உள்ள ஆற்றில் விடுவிக்கப்பட்டன.
ஆற்று வகை ஆமைகள் அழியும் தருவாயில் இருப்பதால், அவற்றின் முட்டைகளை சேகரித்து பிரத்யேகமாக பராமரித்து அவற்றில் இருந்து ஆமைக் குட்டிகள் வெளிவந்த உடன் மீண்டும் ஆற்றில் விடும் நடைமுறை பெருவில் பின்பற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அண்மையில் சேகரித்து பராமரிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆமைக் குட்டிகள் மீண்டும் ஆற்றில் விடப்பட்டன. பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்று ஆமைக்குட்டிகளை கண்டு ரசித்தனர்.
இதையும் படிக்கலாம் : நியூசிலாந்தை வீழ்த்துமா ஆப்கான்? டி20 உலகக்கோப்பையில் பெரிய அணிகளை வீழ்த்திய சின்ன அணிகள்!