வீடியோ ஸ்டோரி

மெரினா: கடல் அலையில் மாற்றுத்திறனாளிகள் விளையாடி மகிழ தற்காலிக பாதை

மெரினா: கடல் அலையில் மாற்றுத்திறனாளிகள் விளையாடி மகிழ தற்காலிக பாதை

Sinekadhara

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையில் விளையாடி மகிழ ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதைகள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளன.

தற்காலிக பாதைகள் திறப்பு விழாவில் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், ககன்தீப் சிங் பேடி ஆகியோர் பங்கேற்றனர். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகளின் சக்கர நாற்காலிகள் எளிதில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக பாதை இன்று முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் கடலில் குளித்து விளையாட சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.