வீடியோ ஸ்டோரி

உரிமங்களை அளித்ததில் முன்னோடியாக உள்ள எல்.ஐ.சியின் தென்மண்டலம்

Veeramani

2020-21ஆம் நிதியாண்டில் உரிமங்களை அளித்ததில் எல்.ஐ.சியின் தென்மண்டலம் முன்னோடியாக திகழ்வதாக தென்மண்டல மேலாளர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.

எல்.ஐ.சியின் தென்மண்டலம் தனது 65ஆவது காப்பீட்டு வார விழாவை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 7ஆம் தேதி வரை கொண்டாடுகிறது. இந்த விழாவை தொடக்கி வைத்த தென்மண்டல மேலாளர் கதிரேசன், தென்மண்டலத்தின் வணிக சாதனைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்காக எடுக்கப்பட்ட புதிய முயற்சிகள் ஆகியவற்றைப் பற்றி கூறினார்.

அதன்படி, தென் மண்டலம் 17 லட்சத்து 11 ஆயிரம் பாலிசிகள் மற்றும் முதல் பிரீமிய வருமானமாக 6 ஆயிரத்து 357 கோடியே 11 லட்சம் ரூபாயை பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும், எல்.ஐ.சியின் முகவர்கள் மற்றும் புது வணிகம் சார்ந்தோர் ஆனந்தா மொபைல் செயலியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி வாடிக்கையாளர்களை அணுகி புது வணிகத்தில் வரலாறு படைப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.