வீடியோ ஸ்டோரி

திருவொற்றியூர் தொகுதியில் சீமான் பின்னடைவு

திருவொற்றியூர் தொகுதியில் சீமான் பின்னடைவு

kaleelrahman

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மூன்றாம் இடத்தில் பின்தங்கியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்தங்கியுள்ளார்.

திருவொற்றியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சங்கர் 2818 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அவரைத்தொடர்ந்து அதிமுக வேட்பாளர் குப்பன் 1961 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், அதனை அடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 1639 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் பின்தங்கியுள்ளார்.