வீடியோ ஸ்டோரி

"திமுக தான் பச்சை சங்கி" - காலணியை காட்டி சீமான் ஆவேசம்

Sinekadhara

திமுக தான் பச்சை சங்கி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசி காலணியை காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அக்கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அண்மையில் யூடியூபர் ஒருவரின் கைதை எதிர்த்ததால், தன்னை சங்கி என பலர் விமர்சித்து வருவதாகவும், ஆனால் யூடியூபர் மீதான வழக்கு விவாதத்தில் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அரசு தரப்பு வழக்கறிஞர் வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார். யார் சங்கி? எனக் கேள்வி எழுப்பிய சீமான், காலணியை காட்டி பேசியது சர்ச்சையாகியுள்ளது.