வீடியோ ஸ்டோரி

'இவை ரயில் பெட்டிகள் அல்ல; பள்ளி வகுப்பறை சுவர்கள்!' - அசத்தும் ஆசிரியர்

'இவை ரயில் பெட்டிகள் அல்ல; பள்ளி வகுப்பறை சுவர்கள்!' - அசத்தும் ஆசிரியர்

PT WEB

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், அரசுப்பள்ளி வகுப்பறையின் சுவர்களை ரயில் பெட்டி போல மாற்றி அசத்தியுள்ளனர்.

பெத்தநாயக்கனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் கடந்த பத்து ஆண்டுகளாக, தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியம் என்பவர், தனது சொந்த செலவில், பள்ளியின் சுவர்களை வண்ணமயமாக மாற்றியுள்ளார்.

பள்ளிச் சுவற்றில் தேசத் தலைவர்களின் ஓவியங்களை வரைந்து, அவர்கள் கூறிய கருத்துகள் எழுதப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறைகளின் வெளிப்புறத்தில் ரயில் பெட்டிபோல வர்ணம் தீட்டியிருப்பது மாணவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஏராளமானோர் தங்களது குழந்தைகளை இந்தப் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.