pmk protest pt desk
வீடியோ ஸ்டோரி

NLC-க்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை: 2 சிறார்கள் உட்பட 28 பேருக்கு நீதிமன்ற காவல்!

என்எல்சி-யை கண்டித்து நேற்று பாமகவினர் முற்றுகை போராட்டத்தில ஈடுபட்ட நிலையில், அது கலவரமாக மாறியது. அது தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

webteam

என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்து நேற்று பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டம் திடீரென கலவரமாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதோடு, காவல்துறை வாகனங்கள் மீதும் கல்வீசித் தாக்கினர். இதில், 5 அதிகாரிகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நேற்றிரவு 2 சிறார்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 26 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.