வீடியோ ஸ்டோரி

பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல்: மோடி, அமித் ஷாவுடன் நடிகைகள் கவுதமி, விஜயசாந்தி!

sharpana

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் நட்சத்திர பிரசார நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நடிகைகள் விஜயசாந்தி, கவுதமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நட்சத்திர பிரச்சார நபர்களின் பட்டியலை பா.ஜ.க.வின் அகில இந்திய தலைமை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.

அதில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர்களான அமித்ஷா, நிதின்கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ஸ்மிரிதி இராணி, கிஷன் ரெட்டி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பா.ஜ.க.மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி, தேஜஸ்வி சூர்யா, இல.கணேசன், வி.பி.துரைசாமி, கே.டி.ராகவன் நடிகைகள் கவுதமி, விஜயசாந்தி உள்ளிட்ட 30 பேர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.