பெட்ரோல் மற்றும் டீசல் மீதாக கலால் வரி குறைப்பு அமலுக்கு வந்ததால் அதன் விலை குறைந்திருக்கிறது.
சென்னையில் நேற்று 106 ருபாய் 66 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட 1 லிட்டர் பெட்ரோல், 5 ரூபாய் 26 காசு குறைந்து தற்போது 101 ரூபாய் 40 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் நேற்று 1 லிட்டர் டீசல் 102 ரூபாய் 59 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 11 ரூபாய் 16 காசு குறைந்து 91 ரூபாய் 43 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. இதையடுத்து மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.