வீடியோ ஸ்டோரி

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு: விடிய விடிய போராட்டம்

நிவேதா ஜெகராஜா

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் குடியிருப்புகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இரண்டாவது நாளாக விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெத்தேல் நகரில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முறையான மின் கட்டணம், வீட்டு வரி செலுத்தி பல ஆண்டுகளாக வசித்து வருவதாகக் கூறி, ஆக்கிரமிப்புகளை இடிக்க விடாமல் குடியிருப்புவாசிகள் கடந்த 26-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், இரண்டாவது நாளாக பெண்கள் உள்ளிட்டோர் இரவு நேரங்களில் சாலையில் உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, பொன்னியம்மன் கோயில் மற்றும் ஈஞ்சம்பாக்கம் சிக்னல் ஆகிய இடங்களில் 8 மணி நேரம் நீடித்த போராட்டம் கைவிடப்பட்டது.