சென்னையை சேர்ந்த கணினி கோட்பாட்டு விஞ்ஞானிக்கு, நாட்டின் மிக உயரிய அறிவியல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள கணித அறிவியல் கழகத்தில் கணினி கோட்பாட்டு அறிவியலின் பேராசிரியராக பணியாற்றி வரும் சாகேத் சவுரப்புக்கு இந்த ஆண்டுக்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்காக நாட்டில் வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் நிறுவன நாளான கடந்த மாதம் 26 ஆம் தேதி, இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2008 ஆம் ஆண்டு கணினி கோட்பாட்டு அறிவியலில் பிஹெச்டி முடித்த பின், 2009 ஆம் ஆண்டு கணித அறிவியல் கழகத்தில் சாகேத் இணைந்தார். கணினி அறிவியலில் சிக்கலான அளவுரு ஆராய்ச்சிகளில் சாகேத் திறம்பட பணியாற்றியிருக்கிறார். அது தொடர்பாக இரு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.