வீடியோ ஸ்டோரி

தஞ்சையில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய விவகாரம்: ஒருவர் கைது

தஞ்சையில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய விவகாரம்: ஒருவர் கைது

Sinekadhara

தஞ்சை வடக்கு வீதியில் எம்ஜிஆர் சிலையை பெயர்த்து அப்புறப்படுத்திய விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை வடக்கு வீதியில் காளிக்கோயில் அருகே 4 அடி உயரத்தில் எம்ஜிஆர் சிலை அமைக்கப்பட்டிருந்தது. இதன் அருகே தேநீர் கடை நடத்திவரும் உரிமையாளர் வழக்கம்போல அதிகாலையில் கடையை திறக்க வந்தபோது எம்ஜிஆர் சிலை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீடத்தை சேதப்படுத்தாமல் சிலையை மட்டும் அடையாளம் தெரியாத நபர்கள் பெயர்த்து எடுத்துச் சென்றிருப்பதாக தேநீர் கடை உரிமையாளர் அதிமுகவினருக்கு தகவல் அளித்தார்.

அதன் பேரில் அதிமுகவினர் அங்கு திரண்ட நிலையில், அருகில் இருந்த தள்ளுவண்டிக்கு கீழே நடைபாதையில் எம்ஜிஆர் சிலை கிடத்தப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த சிலையை பழைய இடத்திலேயே பொருத்தும் பணியில் அதிமுகவினர் ஈடுபட்டனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிலையை பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

அதில், தஞ்சை வடக்கு வீதி காளிக்கோயில் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் குடிபோதையில் சிலையை சேதப்படுத்தியது சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து சேகரை கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.