வீடியோ ஸ்டோரி

புஷ்பா பாடலுக்கு போதை ஆசாமிகள் ’தெறி’ ஆட்டம்! போலீசாரின் லத்தி அடியால் ஓட்டம்!

Sinekadhara

புதுச்சேரி காரைக்கால் மாங்கனி திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில் புஷ்பா பாடலுக்கு சட்டையை கழற்றிவிட்டு ஆடிய இரண்டு போதை ஆசாமிகளை போலீசார் நன்றாக கவனித்த வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.

புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மாங்கனி பெருவிழா மிக சிறப்பு பெற்றது. இதனையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விழாக்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாரதியார் வீதியில் நடைபெற்ற ஆடல் பாடல் மேடை நிகழ்ச்சியில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ’சாமி சாமி’ என்கிற பாடல் ஒளிபரப்பாகிய நிலையில், அதன் முன்பு இரண்டு போதை ஆசாமிகள் சட்டையை கழற்றிவிட்டு ஆட்டம் போட்டனர். இதனைப் பார்த்த அருகில் இருந்த போலீசார் அவர்களை லத்தியால் தாக்கிய காட்சி இப்போது அனைத்து சமூக வலைதளங்களிலும் வைராலி பரவி வருகிறது.

மாங்கனி திருவிழாவில் 'என் சாமி வாய்யா சாமி' பாடலுக்கு நடனம் #Puducherry | #Karaikal | #Pushpa pic.twitter.com/ryIHkSf8JH
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 16, 2022