குளித்தலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பெரம்பலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் உறுதியளித்துள்ளார்.
குளித்தலை ரயில்வே மேம்பாலம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பாரிவேந்தர் எம்.பி.யிடம் பொதுமக்கள் வழங்கினர். அத்திட்டங்களை நிறைவேற்றும் வகையில், சம்பந்தப்பட்ட இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார். குளித்தலை முதல் மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான இடங்களை பாரிவேந்தர் எம்.பி. பார்வையிட்டார்.
வாலாந்தூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குகை வழி பாதை அமைப்பதற்கு ஆய்வு செய்த அவர், நவம்பர் மாதம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். ஆர்.டி.மலை சிவன் கோயிலில் புதிய பெரிய தேர் செய்வதற்கு தன்னுடைய சொந்த நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் வழங்குவதாக கூறினார்.