வீடியோ ஸ்டோரி

மதுரை: சித்தா மையத்தில் சிகிச்சை பெற ஆர்வம் காட்டும் மக்கள்

webteam

மதுரையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி அரசின் சித்தா மையத்தில் சிகிச்சை பெறுவோர் அங்கு நிலவும் நேர்மறையான சூழல் விரைவாக நலம்பெற துணை நிற்பதாகக் கூறுகின்றனர்.

கொரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவிய நிலையில் ,மதுரை ஐயர்பங்களா பகுதியில் தனியார் கல்லூரியில் அரசு கொரோனா சித்தா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர். இவர்களுக்கு மருந்து வழங்குவதோடு மட்டுமல்லாமல், மனதளவில் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 

காலையில் எழுந்தவுடன் யோகா, மூச்சு பயிற்சி அதனைத் தொடர்ந்து சிறிது நேர உடல் பயிற்சியும், பின்னர் கவலை மறக்க சிரிப்பு தெரப்பியும் வழங்கப்படுகிறது. இதே போல் மாலையில் மெல்லிசை பாடல்கள் யோகா மற்றும் பாட்டு போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை மறக்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இது தவிர ஒரு மணி நேரத்திற்கு ஒரு மூலிகை கசாயம் இயற்கையான உணவு மற்றும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதனால் பலர் ஒரு வாரத்திற்குள் தொற்றில் இருந்து குணமடைந்து விடுகின்றனர். பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டாலும் இங்கு நிலவும் சூழலால், இவ்விடத்தை விட்டு பிரிய மனமில்லாமல் செல்வதாக கூறுகின்றனர் இங்கு சிகிச்சை பெற்று குணமடைந்தோர்.