வீடியோ ஸ்டோரி

அரியலூர்: வளர்ப்பு நாய்க்காக உரிமையாளரின் பாசப் போராட்டம்

கலிலுல்லா

வளர்ப்பு நாயை, தனியார் ஆலை நிர்வாகத்தினர் பிடித்துச் சென்றதாகக் கூறி, ஆலையின் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம் நடத்திய சம்பவம் அரியலூரில் நிகழ்ந்துள்ளது.

ராம்கோ குடியிருப்பில் வசிக்கும் ராஜகோபால் என்பவர் வளர்த்து வரும், ஸ்பைகி என்ற நாய் காணாமல் போனதால், அதிர்ச்சியடைந்த அவர், அருகே உள்ளவர்களுடன் விசாரித்துள்ளார். அப்போது, சிமெண்ட் ஆலை நிர்வாகத்தினர், அங்குள்ள நாய்களை பிடித்துச் சென்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து ஆலையின் காவலாளியிடம் கேட்டபோது, நாய் உயிருடன் உள்ளதா எனத் தெரியவில்லை எனக்கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால், ஸ்பைகியை விடுவிக்கக் கோரி, சிமெண்ட் ஆலைக்குச் சொந்தமான 20க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைப்பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.