வீடியோ ஸ்டோரி

"2025 வரை குறைவாக உண்ணுங்கள் மக்களே!" - வடகொரியாவில் தலைவிரித்தாடும் பஞ்சம்

கலிலுல்லா

வடகொரியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், 2025 ஆம் ஆண்டு வரை மக்கள் குறைந்த அளவில் உணவு உண்ணுமாறு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளார்.

அந்நாட்டில் ஒரு கிலோ வாழைப்பழம் மூவாயிரம் ரூபாய்க்கு மேல் விற்கும் அளவுக்கு உணவுப் பஞ்சம் நிலவுகிறது. உணவு உற்பத்தி பல மடங்கு குறைந்துள்ளது. வடகொரியாவுக்கு உணவுப்பொருள்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகளை வினியோகிக்கும் முக்கிய நாடான சீனாவின் எல்லையை, கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக மூடியதே இதற்குக் காரணம் என உலக சுகாதார நிறுவனம் கூறியது.

வெள்ளம் காரணமாக விவசாய உற்பத்தியில் இலக்கை எட்ட முடியவில்லை என அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார். அணு ஆயுத சோதனைகள் காரணமாக, பல நாடுகள் ஏற்கனவே பொருளாதாரத் தடையும் விதித்துள்ளதால், நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.