வீடியோ ஸ்டோரி

கேரளாவில் கால்நடை மருத்துவ  மாணவர்களிடம் கண்டறியப்பட்ட புதிய வகை நோரோ வைரஸ்

kaleelrahman

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பூக்கோடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிலும் 13 மாணவர்களுக்கு அறியவகை நோரோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று பாதிப்பவர்களுக்கு வயிறு மற்றும் குடல் பகுதிகளில் கடுமையான எரிச்சல் ஏற்படுவதோடு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கும் ஏற்படும். விலங்குகளால் பரவும் இந்த நோரோ வைரஸ் அசுத்த நீர் மற்றும் உணவு மூலம் மனிதர்களுக்கு பரவுவதாக கூறப்படுகிறது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.