வீடியோ ஸ்டோரி

தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய விதிமுறைகள்: அரசாணை வெளியீடு

kaleelrahman

பள்ளி கல்லூரி தேர்வுகள், அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகள், மற்றும் இதர தேர்வுகளில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக விதிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் தேர்வுக்கு உதவிடும் வகையில், மாநில, மாவட்ட அளவில் எழுதுபவர், வாசிப்பவர், ஆய்வக உதவியாளர் அடங்கிய ஒரு கமிட்டியை ஏற்படுத்த வேண்டும் என்று அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது. கமிட்டியிலிருந்து யாரேனும் ஒருவரை மாற்றுத்திறனாளி தேர்வரே தேர்வு செய்துகொள்ள அனுமதிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தேர்வறைகள், தேர்வு மையங்களில் சாய்தளம் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கட்டாயம் இருக்கவேண்டும் என்றும் கால்குலேட்டர், பிரெய்லி உபகரணங்களை மாற்றுத்திறனாளிகள் எடுத்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.