வீடியோ ஸ்டோரி

“மூக்கில் ரத்தம் வடிந்த சுவடு” - திமுக எம்.பி மீதான கொலை வழக்கின் எப்.ஐ.ஆர் விவரங்கள்

Veeramani

கடலூர் திமுக எம்.பி ரமேஷ் மீதான முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் தகவல்களை பார்ப்போம்…

முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசுவை 5க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி அடித்து கொன்றதாக முதல்தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடலூர் எம்.பி. டிஆர்வி ரமேஷ், அவரது தனி உதவியாளர் நடராஜன், கந்தவேல், அல்லாபிச்சை, வினோத் மற்றும் முந்திரி ஆலை ஆட்கள் மீது சட்டப்பிரிவுகள் 202 (கொலைக்குற்றம்), 120பி (சதி செய்தல்), 147, 149, 341, 201 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவிந்தராஜூவின் உடலில் இடது கண்ணில் காயமும், மூக்கில் ரத்தம் வடிந்த சுவடும் இருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  சந்தேக மரணம் என முதலில் பதியப்பட்ட வழக்கு, பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது. கொல்லப்பட்ட கோவிந்தராசு 7 ஆண்டுகளாக கடலூர் எம்.பி. ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றியவர், தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு உயிரிழப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒருவாரமாக முந்திரி ஆலையில் தனக்கு பிரச்னை என தெரிந்தவர்களிடம் கோவிந்தராசு கூறி வந்துள்ளார், கடந்த மாதம் 20ஆம் தேதி அதிகாலை எம்.பி. ரமேஷின் உதவியாளர், கோவிந்தராசுவின் மகனுக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார் எனவும் எப் ஐ ஆர் தெரிவிக்கிறது.