வீடியோ ஸ்டோரி

சம்பளத்தில் மகிழ்ச்சியை ஒளித்து வைத்திருப்பவரா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுகோங்க!

நிவேதா ஜெகராஜா

உண்மையான மகிழ்ச்சியென்பது, நாம் வாங்கும் சம்பளத்தில் இருப்பதில்லை; வேறொரு விஷயத்தில்தான் உள்ளது. அந்த விஷயம் என்ன? இந்தக் கேள்விக்கான பதிலை, ஒரு குட்டி ஸ்டோரி வழியாக சொல்கிறோம் தெரிஞ்சுக்கோங்க!

இரண்டு நண்பர்கள், ஒரே நேரத்தில் ஒரே நிறுவனத்தில் தங்களின் பணியை தொடங்குகின்றனர். இருவரில் ஒருவர் மிக வேகமாக தனது துறையில் வளர்ந்துவிடுகிறார். அவருடைய சம்பளமும், பதவியும் தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே போகிறது. மற்றொருவர் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு செல்கிறார். ஒருகட்டத்தில் இருவரும் வெவ்வேறு நிறுவனங்களை சார்ந்து இயங்கத் தொடங்குகின்றனர்.

சில வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் ஒரே நிறுவனத்துக்காக இயங்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது வேகமாக முன்னேறிய முதலாம் நண்பர், உயரிய பதவியில் அதிக சம்பளத்தில் இருக்கிறார். மற்றொருவர், அவருடன் ஒப்பிடுகையில் குறைந்தளவில் இருக்கிறார். பல வருடங்கள் கழித்து இருவரும் அலுவலகத்தில் சந்தித்திக்கொள்ள நேர்கையில், இரண்டாம் நண்பர் தனது அந்நண்பரிடம் `நீ தான்பா சரி. எவ்வளவு வேகமா வேலையில வளர்ந்துட்ட பாரு! கை நிறைய சம்பளத்தோடு நிம்மதியான வாழ்க்கை! உன்னை பார்க்கையிலேயே மகிழ்ச்சியா இருக்கு எனக்கு’ என்றுள்ளார்.

இதைக் கேட்ட அந்த மற்றொரு நண்பர், `அப்படியெல்லாம் இல்லப்பா... நீ தான் சரி. எதையுமே பொறுமையாதான் அடையணும். அப்போதான் நாம பொறுப்பேத்துக்கும் பதவிக்கும் வேலைக்கும் நம்மால நம்மை முழுமையா தகுதிப்படுத்திக் கொள்ள முடியும். இப்போ நான் சம்பளம் நிறைய வாங்கிறேன்தான்... இல்லைனு அதை மறுக்கலை. ஆனா வாங்குற சம்பளத்துல பாதி மருத்துவமனைக்கே செலவாகிடுது. என்ன செய்றது!? எப்பவுமே மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது, மருத்துவமனை வாசல் நாடாத வாழ்க்கைதான். அப்படி பார்த்தால், நீ வாழ்வதுதான் உண்மையில் மகிழ்ச்சியான வாழ்க்கை’ என்றுள்ளார்.

ஆம், மருத்துவமனை வாசலை நாடாத வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை! இதை உணர்ந்து செயல்பட்டாலே, நம்மால் நம் வாழ்வில் எளிதில் வெற்றியடைய முடியும்.