கடலூரில் பெற்ற மகனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், திருப்பாதிரிபுலியூர் பகுதியில் உடம்பில் காயங்களுடன் 12 வயது சிறுவன் ஒருவன் பசியுடன் உலா வந்த நிலையில், காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தனது தாய், கரண்டியை நெருப்பில் சுடவைத்து உடல் முழுவதும் சூடுவைத்து சித்ரவதை செய்ததாக கூறியுள்ளார் சிறுவன். இதையடுத்து சிறுவனின் வீட்டுக்குச் சென்ற காவல் துறையினர், அவரது தாய் சாந்திதேவியை பிடித்தனர்.
சிறுவனின் தந்தை உயிரிழந்த நிலையில், வேறு ஒருவருடன் உறவில் இருந்த தாய் சாந்திதேவி, சிறுவனை துன்புறுத்தியது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறை, சாந்திதேவி மற்றும் அவருடன் உறவில் இருந்த அகமது ஆகியோரை கைது செய்தனர்.