வீடியோ ஸ்டோரி

திருச்சி: கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய சிறுவன்; ஆட்சியர் பாராட்டு

திருச்சி: கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய சிறுவன்; ஆட்சியர் பாராட்டு

PT WEB

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கிணற்றில் தவறி விழுந்த எட்டு வயது மகளை காப்பாற்றச் சென்ற தாய் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சிறுமியை பத்திரமாக மீட்ட சிறுவனுக்கு பரிசுத்தொகை வழங்கி ஆட்சியர் பாராட்டினார்.

திருச்சி, மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியைச் சேர்ந்த குணா என்பவர் தனது மகள் லித்திகாவுடன், கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, கால் தவறி, லித்திகா கிணற்றில் தவறி விழுந்தார். அவரை காப்பாற்றுவதற்காக, சிறுமியின் தாய் குணாவும் கிணற்றில் குதித்ததால், இருவரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த எட்டு வயது சிறுவன் லோஹித் என்பவர், உடனடியாக கிணற்றில் குதித்து லித்திகாவை காப்பாற்றினார். ஆனால் சிறுமியின் தாயை காப்பாற்ற முடியாததால், நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், குணாவின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சிறுமியை துணிச்சலாக காப்பாற்றிய, லோஹித்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் காசோலை வழங்கி, ஆட்சியர் சிவராசு பாராட்டினார்.