வீடியோ ஸ்டோரி

கடவுள் பாதி... மிருகம் பாதி! இறுதியில் வெல்வது யாராக இருக்கும்? #MorningMotivation

நிவேதா ஜெகராஜா

சிறுவனொருவனுக்கு திடீரென ஒரு சந்தேகம் தோன்றியது. அதாவது, மனிதர்களுக்கு கடவுளும் மிருகமும் இருக்கிறது என்பது உண்மையா இல்லை பொய்யா என்பது. இதை தனது தாத்தாவிடம் பேரன் கேட்டிருக்கிறான்.

அதற்கு அந்த முதியவர், `ஆம், அது உண்மைதான். மனிதர்களுக்குள் கடவுளும் மிருகனும் இருக்கிறார்கள்’ என்றுள்ளார். அதற்கு அச்சிறுவன், `அப்படியெனில், எப்போது கடவுள் தெரிவார்? எப்போது மிருகம் தெரியும்?’ எனக்கேட்டுள்ளான். அதற்கு அவனது தாத்தா, `நீ அன்று உனது நண்பனோடு விளையாடிய போது, ஒரு சிறுவன் பசியோடு இருந்ததை பார்த்து அவனுக்கு உணவளித்தாய் அல்லவா... அப்போது உனக்குள் இருந்த கடவுள் தெரிந்தார். ஆனால் உன் நண்பனோடு விளையாடியபின் உன் நண்பனுக்கும் உனக்கு சண்டை வந்ததில்லையா... அப்போது உனக்குள் இருந்த மிருகம் தெரிந்தது’ என்றுள்ளார்.

இதை கேட்ட சிறுவன், `இதில் கடவுள் ஜெயிக்குமா, இல்லை மிருகம் ஜெயிக்குமா?’ என்றுள்ளார். அதைக்கேட்ட அந்த முதியவர், `எதற்கு நீ அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறாயோ அதுதான் வெற்றியடையும். கடவுள் தன்மை அதிகம் வளர, நீ அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லை மிருகமெனில் அதற்கு... எப்படியாகினும் தேர்வு உன்னுடையதுதான்’ என்றுள்ளார்.

ஆம் நாம் யாராக இருக்க வேண்டுமென்பதை நாமே முடிவு செய்ய வேண்டும்.