வீடியோ ஸ்டோரி

580 ஆண்டுகளுக்கு பிறகு நீண்ட நேரம் தென்பட்ட சந்திர கிரகணம்

Sinekadhara

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 580 ஆண்டுகளுக்கு பிறகு நீண்ட சந்திர கிரகணம் தென்பட்டது.

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம். நடப்பாண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தென்பட்டது.

இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் தென்படவில்லை. எனினும் மற்ற நாடுகளில் நீண்ட நேர சந்திர கிரகணமாக நிகழ்ந்தது. 3 மணி நேரங்களுக்கு மேல் நிகழ்ந்த வானியல் அற்புதத்தை மக்கள் கண்டு ரசித்தனர். சுமார் 580 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய நீண்ட சந்திர கிரகணம் தோன்றியுள்ளது. மீண்டும் இதுபோன்ற நீண்ட நேர கிரகணம் 2,669ஆம் ஆண்டு ஏற்படும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.