வீடியோ ஸ்டோரி

தொடரும் கனமழை - எங்கும் இருள்சூழ்ந்து காணப்படும் கொடைக்கானல்

தொடரும் கனமழை - எங்கும் இருள்சூழ்ந்து காணப்படும் கொடைக்கானல்

webteam

கொடைக்கானல் அடுக்கம் பெரியகுளம் சாலையில் கனமழைக்கு 100 அடி நீளத்திற்கு சாலை முழுவதும் பெயர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவால் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அடுக்கம் பெரியகுளம் சாலையில் குருடிக்காடு என்ற இடத்தில் சுமார் 100 அடி நீளத்திற்கு சாலை முற்றிலும் பெயர்ந்துள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் இருந்து பெரியகுளம் வழியாக கொடைக்கானல் வரும் பொதுமக்களும், அடுக்கம், சாமக்காட்டு பள்ளம், சாமக்காட்டு காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களும் அச்சாலையை பயன்படுத்த முடியாமல் டம்டம் பாறை வழியாக சுற்றிவரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்தில் பெயர்ந்து விழுந்த சாலையை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொண்டை ஊசி வளைவின் மேல் பகுதியில் உள்ள சாலை முழுவதும் பெயர்ந்து வளைவின் கீழ் பகுதியில் உள்ள சாலையை மூடி உள்ளதால் இந்த சாலையை சீரமைக்க சில வாரங்கள் ஆகும் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் அடுக்கம் பெரியகுளம் சாலை சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கொடைக்கானலில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், அங்கு முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.