விரைவில் சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏற்கனவே திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர், அறிஞர் அண்ணா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் வ.உ.சிதம்பரனார், முன்னாள் முதலமைச்சர்கள் சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ஆகியோரின் உருவப்படங்களும் திறக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தையும் சட்டப்பேரவையில் திறந்து வைக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திக்கும் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்திடுமாறு கோருவார் என்று தெரியவந்துள்ளது. அவர் ஒப்புதல் கொடுத்து நேரம் ஒதுக்கிய பின், அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.