வீடியோ ஸ்டோரி

காஞ்சிபுரம்: மழை வெள்ள பாதிப்பால் 25,000 ஏக்கரில் பயிர்கள் பாதிப்பு - விவசாயிகள் கவலை

Veeramani

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கன மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் கதிர்கள் மழை நீரில் மூழ்கி விவசாயிகளை பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது

காஞ்சிபுரம், உத்தரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  காஞ்சிபுரம் மாவட்டம் மொத்தமுள்ள 381 ஏரிகளில் 338 ஏரிகள் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டி இருப்பதனால் பெரும்பாலான ஏரிகளில் இருந்து நீர்வரத்து தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன, இதனால் நீர் வரத்து கால்வாயில் இருந்து நீரானது வயல்வெளிகள் உட்புகுந்து தொடர் மழை காரணமாக வயல்வெளிகளில் தேங்கி நிற்கின்றன. எனவே வயல்வெளியில் இருக்கக்கூடிய நீர் வெளியேறுவதற்கு வழி இல்லாத காரணத்தினாலும் நெற்கதிர்கள் அனைத்தும் அழுகி தற்போது வீணாகிப் போய் உள்ளது.

இதனால் சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் கவலை அடைந்து இருக்கிறார்கள். இதுவரை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் 3000 ஏக்கர் அளவுக்கு விளை நிலங்கள் முழுமையாக பாதிப்படைந்து இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள். பெரும்பாலான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இருப்பதாகவும், பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக பயிர் காப்பீடு செய்ய வேண்டும் எனவும் வேளாண்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளார்கள்.