கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த +2 மாணவியின் உடலை நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பகலவன் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு சீராக வைக்கப்படும் என்றும், மீண்டும் அமைதி மாவட்டமாக கள்ளக்குறிச்சி இருக்கும் எனவும் தெரிவித்தார். இதற்கிடையே, கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள மாணவியின் வீடு மற்றும் அப்பகுதியில் மயானம் உள்ளிட்ட பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைத்து 700க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.