வீடியோ ஸ்டோரி

தமிழகத்தில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக போலி வீடியோ வெளியிட்ட ஜார்க்கண்ட் இளைஞர் கைது

webteam

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ வெளியிட்டு அவதூறு பரப்பியதாக ஜார்க்கண்ட் மாநில இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாடு சைபர் க்ரைம் காவல்துறையினர் ஜார்க்கண்ட் சென்று பிரசாந்த் குமார் என்ற இளைஞரை கைது செய்திருக்கிறார்கள். ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் வீடியோகளை வெளியிட்டு வதந்தியை பரப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கெனவே வதந்தியை பரப்பியதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக போலி வீடியோகளை வெளியிட்டதால் வெளிமாநில தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்ரைதச் சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.