மீண்டுமொரு பெருவெள்ளத்தை எதிர்கொள்ள சென்னை தயாரா? - ஆற்றங்கரையோர பகுதிகளின் நிலவரம்
2015 பெருவெள்ளத்தை சென்னை மக்கள் மறந்திருக்க முடியாது. அந்த மழைநேரத்தில் சென்னை அடையாறு ஆற்றங்கரையோரம் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. தற்போது வடகிழக்குப்பருவமழை காலம் தொடங்கியிருக்கக் கூடிய சூழலில் அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலவரம் என்ன? என்பதை மேற்கண்ட வீடியோவில் பார்க்கலாம்.
2015இல் பெரும் பாதிப்படைந்த சைதாப்பேட்டை பகுதி முன்னெச்சரிக்கையாக அடையாறு தூர்வாரப்பட்டுள்ளது. குடிசைப் பகுதி மக்கள் வாழும் பகுதியில் கரை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.44 லட்சம் செலவில் மிதவை இயந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டுள்ளது.