சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேர்காணல் நடைபெற்றது. திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் மட்டுமே விருப்பமனு அளித்தார். அதன்படி அவரிடம் நேர்காணல் நடைபெற்றது. காட்பாடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடமும் நேற்று நேர்காணல் நடைபெற்றது.