வீடியோ ஸ்டோரி

வாடகை கட்டாத கடைகளுக்கு சீல் - உதகையில் வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டம்

kaleelrahman

உதகை மார்க்கெட் கடை வியாபாரிகள், நிலுவையில் உள்ள வாடகை பணத்தை கட்டாததால் கடந்த வாரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கடைகளுக்கு சீல் வைத்ததை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகை நகராட்சிக்குச் சொந்தமான தினசரி மார்க்கெட்டில், 1,587 கடைகள் உள்ளன. இந்த கடைகளின் நிலுவை வாடகை பாக்கி, 38 கோடி ரூபாயை எட்டியது. நிலுவை வாடகையை செலுத்த, நகராட்சி நிர்வாகம் ஒருவார காலம் அவகாசம் அளித்தது. ஆனால், வியாபாரிகள் வாடகை பாக்கியை செலுத்தவில்லை என்று கூறி நகராட்சி நிர்வாகம் சார்பில் முதற்கட்டமாக, கடந்த வாரம் முதல் இதுவரை 736 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

இந்நிலையில், இதனை கண்டித்து உதகையில் நகராட்சி கடை வியாபாரிகள் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தற்போது கடைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள 7 முதல் 10 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ள வாடகையை கமிட்டி அமைத்து வியாபாரிகளுக்கு கட்டுப்படியாகும்படி நிர்ணயித்தால் 10நாட்களுக்குள் பாக்கித் தொiயை கட்டி முடிப்பதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டள்ளது.