வீடியோ ஸ்டோரி

கடவுளை அணுக ஒரு ஷார்ட் & ஸ்வீட் Way இருக்கு! என்ன தெரியுமா? #MotivationStory

நிவேதா ஜெகராஜா

கடவுளை எப்படி மனிதர்கள் உண்மையில் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர வைக்க, ஒரு குட்டி ஸ்டோரி இங்கே!

செல்வந்தரொருவர், தன்னுடைய தோட்டக்காரரை அழைத்து, தங்கள் தோட்டத்தில் விளைந்த வாழைத்தார் ஒன்றை, கோயிலில் கடவுளுக்கு ஒப்படைக்க சொல்லி அறிவுறுத்துகிறார். இதைக்கேட்ட தோட்டக்காரரும், வாழைத்தாருடன் கோயிலுக்கு நடந்து செல்கிறார். வழியில் அந்த தோட்டக்காரருக்கு மிகுந்த பசி ஏற்பட்டிருக்கிறது. `மிகவும் பசிக்குதே’ என்று நினைத்த அவர், அந்த மொத்த வாழைத்தாரிலிருந்து இரண்டு வாழைப்பழங்களை எடுத்து சாப்பிட்டுவிடுகிறார்.

பசி அடங்கிய பின், அந்த வாழைத்தாரை கோயிலில் கடவுளுக்கு படைத்தும் விடுகிறார் அந்த தோட்டக்காரர். இதன்பின், அன்றைய தினம் இரவு அந்த செல்வந்தருக்கு கனவொன்று வருகிறது. அதில் கடவுள் அவர்முன் தோன்றி `நீ எனக்கு கொடுத்த இரண்டு பழங்களும், மிகவும் சுவையாக இருந்தது’ என்று கூறுகிறார். இதைக்கேட்டு கண் விழித்த செல்வந்தருக்கோ, அதிர்ச்சி. `அட, நாம ஒரு வாழைத்தாரையே கொடுத்தோமே... ரெண்டுதான் கடவுளை சென்றடைந்ததா’ என குழப்பமும்கூட.

விடியும் வரை காத்திருந்த அவர், விடிந்த பின் தோட்டக்காரரிடம் சென்று `அந்த வாழைத்தாரை கடவுளுக்கு படைத்தீர்களா’ எனக் கேட்டார். அதற்கு தோட்டக்காரர், நடந்த எல்லாவற்றையும் கூறி `மன்னித்துவிடுங்கள் ஐயா, ரொம்ப பசித்ததால் நான் 2 பழங்களை சாப்பிட்டுவிட்டேன். மற்றபடி முழு தாரையும் கடவுளுக்கு சமர்ப்பித்துவிட்டேன்’ என்றார்.

இதைக்கேட்ட பின்னரே செல்வந்தர் உணர்ந்தார் `பசித்தவனுக்கு செய்வதுதான் படைத்தவனுக்கு செய்வது!’ இதை உணர்ந்து, நாமும் கடவுளுக்கு படைப்பதை, பசித்தவனுக்கு படைப்பது கடவுளை நாம் உணர வழிவகுக்கும்! அதன்பின் எந்நாளும் நன்னாளே!