நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மதுரை வைகை ஆற்றில் 13 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மூன்று தரை பாலங்கள் மூழ்கியுள்ள நிலையில், வைகை கரையோரமுள்ள அணுகு சாலை மற்றும் மீனாட்சி கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் கோரிப்பாளையம், செல்லூர், சிம்மக்கல், நெல்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.